HolyIndia.Org
Holy India Org Add New Temple

நாச்சியார்கோயில்


இறைவன்திருநறையூர் நம்பி
இறைவிவஞ்சுளவல்லி
தல மரம்வகுளம் (மகிழம்)
தீர்த்தம்மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
புராண பெயர்சுகந்தகிரி க்ஷேத்ரம்
கிராமம்/நகரம்நாச்சியார்கோயில்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்


திருமங்கையாழ்வார்

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம்.