HolyIndia.Org
Holy India Org Add New Temple

நாங்குனேரி


இறைவன்தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).
இறைவிவரமங்கை தாயார்.
தல மரம்மாமரம்,
தீர்த்தம்சேற்றுத்தாமரை
புராண பெயர்வானமாமலை, திருவரமங்கை
கிராமம்/நகரம்நாங்குனேரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
சிறப்பு : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.
பிரார்த்தனை : ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும்.
நேர்த்திக்கடன் : பெருமாளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி-627108 திருநெல்வேலி மாவட்டம்