HolyIndia.Org
Holy India Org Add New Temple

நங்கவள்ளி


இறைவன்சோமேஸ்வரர்
இறைவிசவுந்தரவல்லி
கிராமம்/நகரம்நங்கவள்ளி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் "தொட்டிநங்கை' என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது.

இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள்.

அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர்.

அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது.


திருவிழா : தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு, கோகுலாஷ்டமி, தீபாவளி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். சனிக்கிழமை விசேஷ நாளாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆவணி சுவாதியில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விஜயதசமி அன்று சுவாமி வீதி உலா நடத்தப்படும். பிரதோஷ நாட்களில் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் நன்மை உண்டாகும். பங்குனி மாதத்தில் 19 நாள் பிரம்மோற்சவம் நடக்கும்.
சிறப்பு : சிவாலயத்தில் நரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ளது இங்கு தனிசிறப்பு
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல விநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை : தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
தல சிறப்பு : இந்த கோயில் ரெட்டியார், தேவாங்கர், வன்னியகுல சத்திரியர், நாயக்கர் சமுதாய மக்களுக்கு குலதெய்வ கோயிலாக விளங்குகிறது. கோயிலின் நுழைவு வாயிலில் கொடிமரத்தை அடுத்து அதிகார நந்தி இருக்கிறது. மகாமண்டபத்தில் விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், சவுந்தரவல்லி உள்ளனர். அர்த்தமண்டபத்தில் நந்தியும், கருவறையில் சோமேஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்.

நர்த்தன கணபதி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சிவதுர்க்கை, வன்னிவிநாயகர், அஷ்டதிக் பாலகர்கள் அருள்புரிகின்றனர். நவக்கிரக சன்னதியும் இருக்கிறது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.