HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவகோட்டை


இறைவன்சுந்தரேஸ்வரர்
இறைவிமீனாட்சி
கிராமம்/நகரம்தேவகோட்டை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு :  63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை "மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.

மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக் கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்


திருவிழா : வைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.
சிறப்பு : இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் "சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் :

:இரு ராஜ கோபுரங் களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வர ரும் தனித்தனியாக வீற்றிருக்கின்ற னர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த் தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசா லாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ர மணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங் கள், கன்னிமூலை விநாயகர் ஆகி யோருக்கு சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை :  திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்


நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்பு : சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற் புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெரு மானுக்கு கோயில் அமைக்க முயன் றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக் கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார்.

இந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கி னார். அதில், "சேக்கிழார் கோயில் மணி' என்று பொறிக்கப்பட்டுள்ளது.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை