HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவைகன் மாடக்கோவில்


வைகன் நாதர் உடனுறை வைகன் நாயகி திருக்கோயில் திருவைகன் மாடக்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவைகன் மாடக்கோவில் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.

கோயில் பற்றி: இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

தல வரலாறு ஊர் - வைகல்; கோயில் - மாடக்கோயில். இக்கோயிலில் இலக்கு வழிபட்டு பேறு பெற்றாள். சிறப்புக்கள் இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் - 'வளநகர் ' என்று இப்பகுதி வழங்குகிறது - திருமால் வழிபட்டது, 2. பிரமபு£¦சுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில் - பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது. சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள். மூலவர் - சுயம்பு மூர்த்தி; அழகான பாணம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் 'நாட்டார் வாய்க்கா 'லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள காலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.)