HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவாளப்புத்தூர்


இறைவன்மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
இறைவிபிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி
தல மரம்வாகை
தீர்த்தம்பிரம்மதீர்த்தம்
புராண பெயர்திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
கிராமம்/நகரம்திருவாளப்புத்தூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிககிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.

 தலவிநாயகர்: நிருதி விநாயகர். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம். இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேஷ பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.


பாடியவர்கள் :

சுந்தரர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

""சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார் ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார் தோகைமாமயிலனைய துடியிடை பாகமும் உடையார் வாகைநுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர்உளாரே'.

- திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம். 

 


முகவரி : அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர் - 609 205. நாகப்பட்டினம் மாவட்டம்.