HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவாலம்பொழில்


ஆத்மநாதேஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில் திருவாலம்பொழில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவாலம்பொழில் கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் உள்ளது.

கோயில் பற்றி:

தல வரலாறு மக்கள் வழக்கில் திருவாலம்பொழில், திருவாம்பொழில் என வழங்குகிறது. இத்தலக் கல்வெட்டில் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. சிறப்புக்கள் காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழயாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.