HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவலிவலம்


மனத்துனைநாதர், இருதய கமலநாதர் உடனுறை மாழையுங்கண்ணி திருக்கோயில் திருவலிவலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவலிவலம் கோயில் திருநாவுக்கரசர் - 1திருஞானசம்பந்தர் - 2சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது

கோயில் பற்றி: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர் மனத்துனைநாதர் சந்நிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்கள் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.