HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவதிகை

திருவதிகை_சரநாராயணப்_பெருமாள் -
இறைவன்வீரட்டானம்
இறைவிபெரியநாயகி
தல மரம்சரங்கொன்றை
தீர்த்தம்சூலத்தீர்த்தம்
புராண பெயர்அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்
கிராமம்/நகரம்திருவதிகை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு :  தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.

 உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கானர் ஈசன்.பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.


திருவிழா : பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம்
திறக்கும் நேரம் : காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் :  திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார்.அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது.சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சந்நிதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார் . அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார்.

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.

திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

சுவாமியின் பிறபெயர்கள் : ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)

அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி

தலவிநாயகர் : சித்தி விநாயகர்.

பிற தீர்த்தங்கள் :  கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி


பிரார்த்தனை : இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.

குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.

மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.


நேர்த்திக்கடன் : நிலை மாலை சாத்துதல், சுவாமி பொட்டுக் கட்டுதல் அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத்தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
தல சிறப்பு :

வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். 

இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.

முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார்.ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே.

தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.

முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான்.

அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது.

அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே.

அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது.

சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய் ) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.

 மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது.

திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன.

கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.

சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது.

வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது.

உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.

பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.

அம்பாள் சந்நிதி சுவமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும்.

ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும். 

 


பாடியவர்கள் :  நாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

 தேவாரப்பதிகம்

 பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.

-திருஞானசம்பந்தர்

 தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்


முகவரி : அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607 106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம்.