HolyIndia.Org
Holy India Org Add New Temple

ரமண மகரிசி

இரமண மகரிஷி

ரமண மகரிஷி (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.

இவரது இயற்பெயர் வெங்கடராமன். இரமணரின் இளமைக்காலம் எல்லா சிறுவர்களையும் போல, வேடிக்கையும், விளையாட்டுமாய் இருந்தது. மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம் ஒருமுறை, உறவுமுறைப் பெரியவர் ஒருவர், திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க, அதன் மூலமாக, அவருக்கு, திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களை பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 16ஆவது வயதில், திடீரென, தன்னைத்தானே, 'தேடுபவன் யார்?' என்கிற வினவலை கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவர், எழுப்பிய வினவலுக்கு விடையாக, தேடுபவன் மறைந்து, எல்லாம் வல்ல பரம்பொருள் மட்டுமே நிலைக்க, வேறொன்றும் இல்லாத நிலையில், எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார். [தொகு] உபதேசங்கள்

இரமணரின் முக்கியமான உபதேசம் 'சுய வினவல்' ஆகும். ஞான மார்க்கத்தில் இறைவனை அறிதலும், முக்தி பெறுதலும் இவ்வழியின் பயன்கள் ஆகும். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களில் தொகுப்பான 'நான் யார்?', என்ற புத்தகம், முக்கியமானதாகும்.

ஆதி சங்கரரின் சமஸ்கிருத புத்தகமான 'ஆத்ம போதம்' தனை, தமிழில் வெண்பாக்களாக இரமணர் வழங்கியுள்ளார்.

திருவண்ணாமலை - அட்டமா சித்திகள் - கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் - திருவண்ணாமலை அமைவிடம் - திருவண்ணாமலை கல்வெட்டு - திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா - திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் - திருவண்ணாமலை கோயில் தூரம் - திருவண்ணாமலை கோயில் நேரம் - திருவண்ணாமலை சித்தர் - திருவண்ணாமலை சிறப்புக்கள் - திருவண்ணாமலை தலவரலாறு - திருவண்ணாமலை தேவாரம் - திருவண்ணாமலை பதிகங்கள் - திருவண்ணாமலை பூசைகள் - திருவண்ணாமலை முகவரி - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் - திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் - நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை - ரமண மகரிசி -