HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவக்கரை


சந்திரசேகரர் உடனுறை வடிவாம்பிகை திருக்கோயில் திருவக்கரை என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவக்கரை கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் உள்ள மயிலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 22 Km தொலைவில் திருவக்கரை சிவஸ்தலம் உள்ளது. மயிலத்தில் உள்ள முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

கோயில் பற்றி: சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.