திருமோகூர்
| இறைவன் | காளமேகப்பெருமாள் |
| இறைவி | மோகனவல்லி |
| தல மரம் | வில்வம் |
| தீர்த்தம் | தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம் |
| புராண பெயர் | மோகன க்ஷேத்ரம் |
| கிராமம்/நகரம் | திருமோகூர் |
| மாவட்டம் | மதுரை |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா : வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
சிறப்பு : இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
பொது தகவல் : இங்கு மோட்சதீப வழிபாடு சிறப்பு பெற்றது.
பிரார்த்தனை : முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க, செய்யும் செயல்கள் வெற்றி பெற இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்-625 107 மதுரை மாவட்டம்