HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமுல்லைவாசல்


முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி திருக்கோயில் தென்திருமுல்லைவாயில் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

தென்திருமுல்லைவாயில் கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சீர்காழியில் இருந்து 14 Km தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோயில் பற்றி: இது, கடற்கரைக் கோவிலாகும். சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது. தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது) உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம்.