திருமழப்பாடி
வஜ்ரஸ்தம்பநாதர், வச்சிரதம்பேஸ்வரர் உடனுறை அழகம்மை திருக்கோயில் திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 3,சுந்தரர் - 1 பாடல் பெற்றது.
வழி: இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம்.
கோயில் பற்றி:
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ!
தல வரலாறு
- ஈசன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி, நடனமாடிய
பதியாதலின்,இப் பெயர் பெற்றது.
நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம்
செய்விக்கப் பெற்றத் தலம். பிரமலோகத்திலிருந்தச்
சிவலிங்கத்தை, புருஷாமிருக ரிஷி இங்கு
எழுந்தருளுவித்தார். இதை மீண்டும் பிரமன்,
பெயர்க்கமுனைந்தபோது, முடியாமல், பிரமன்,
இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால்,
இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார்.
ஈசன், சுந்தரர் பால்,
"மழபாடிக்கு வர மறந்தனையோ" என
அழைத்த திருத்தலம்.
சிறப்புக்கள்
- திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி
புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.
- கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச்
செல்கிறது.
- இங்குள்ள சிற்பங்கள் (ஒரே கல்லாலான சோமஸ்கந்தர், ரிஷப வாகனத்தில் குரு
தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்காரமூர்த்தி, புருஷாமிருக ரிஷி வழிபடும்
காட்சி முதலியன) மிகச் சிறப்பு.
- திருவையாற்றைச் சுற்றியுள்ள
சப்த ஸ்தானங்களுடன் தொடர்புடையது.
- இக் கோவிலில், சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள்
படியெடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவையாற்றிக்கு வடமேற்கே 6கீ.மீ.தூரத்தில் உள்ளது. அரியலூர், திருவையாறு,
தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.