HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமயம்

திருமயம்_சத்திய_மூர்த்தி_பெருமாள் -
இறைவன்சத்தியகிரீஸ்வரர்
இறைவிவேணுவனேஸ்வரி
தல மரம்மூங்கில்மரம்
தீர்த்தம்சந்திரபுஷ்கரணி
புராண பெயர்திருமய்யம்
கிராமம்/நகரம்திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரை திருவிழா - 10 நாட்கள் - 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். ஆடிபூரம் - 10 நாள். தைப் பூசம் - 1 நாள் திருவிழா. பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி கிரிவலம்:இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு : பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது.இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர்(பழம்பதிநாதர்) திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது. 
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. 

தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும்.


நேர்த்திக்கடன் : வளையல்,பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள்
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம்- 622 507 புதுக்கோட்டை மாவட்டம்