HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருமணிமாடக்கோயில்


இறைவன்பத்ரிநாராயணர்
இறைவிபுண்டரீக வல்லி
தல மரம்பலா
தீர்த்தம்இந்திர புஷ்கரிணி
புராண பெயர்பலாசவனம்
கிராமம்/நகரம்திருமணிமாடக்கோயில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், தை மாதத்தில் கருடசேவை உற்சவம்.
சிறப்பு : பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார்.வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : ஒரே தலத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்யதேசங்களையும், சிவாலயங்களையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
பிரார்த்தனை : இங்கு வேண்டிக்கொண்டால் கோபம் குறையும், தோஷங்கள் விலகும், ராஜயோக பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் - 609 106. நாகப்பட்டினம் மாவட்டம்.