HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்புல்லாணி


இறைவன்ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்
இறைவிகல்யாணவல்லி, பத்மாசனி
தல மரம்அரசமரம்
தீர்த்தம்ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
புராண பெயர்திருப்புல்லணை
கிராமம்/நகரம்திருப்புல்லாணி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பிரம்மோற்சவத் திருவிழா - பங்குனி மாதம் ராமர் ஜெயந்தி திருவிழா - சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் .
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : ஆதிஜெகந்நாதருக்கு பங்குனி யிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ண மியன்று ராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.
பிரார்த்தனை : பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : தாயாருக்கு புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். வசதிபடைத்தவர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி அளிக்கலாம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி - 623 532 ராமநாதபுரம் மாவட்டம்.