HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்புட்குழி


இறைவன்விஜயராகவப் பெருமாள்
இறைவிமரகதவல்லி
தல மரம்பாதிரி
தீர்த்தம்ஜடாயு தீர்த்தம்
புராண பெயர்திருப்புட்குழி
கிராமம்/நகரம்திருப்புட்குழி
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.
சிறப்பு : மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம்- விஜய வீர கோட்டி விமானம்
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.
நேர்த்திக்கடன் : தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- 631 502 காஞ்சிபுரம் மாவட்டம்