HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருப்பாடகம்


இறைவன்பாண்டவ தூதர்
இறைவிசத்யபாமா, ருக்மணி
தீர்த்தம்மத்ஸ்ய தீர்த்தம்
புராண பெயர்திருப்பாடகம்
கிராமம்/நகரம்திருப்பாடகம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.
சிறப்பு : கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம் காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்