HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருநெல்வேலி

காந்திமதி_நெல்லையப்பர்_கோவில் - தாமிரபரணி_ஆறு - திருநெல்வேலி_அல்வா - திருநெல்வேலி_உச்சிஷ்ட_கணபதி - திருநெல்வேலி_கெட்வெல்_ஆஞ்சநேயர் - திருநெல்வேலி_சிறப்பு - திருநெல்வேலி_தீப்பாச்சியம்மன் - திருநெல்வேலி_தேவாரம் - திருநெல்வேலி_தொண்டர்கள்_நயினார் - திருநெல்வேலி_வரதராஜப்_பெருமாள் -
திருநெல்வேலி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது. ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.