HolyIndia.Org
திருநாரையூர்
சௌந்தரேஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி திருக்கோயில் திருநாரையூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருநாரையூர் கோயில் திருநாவுக்கரசர் - 2,திருஞானசம்பந்தர் - 3 பாடல் பெற்றது.
வழி: சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 15 Km தொலைவில் திருநாரையூர் சிவஸ்தலம் உள்ளது.
கோயில் பற்றி: தல வரலாறு
நாரை பூஜித்ததால், இப் பெயர்.
தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.
சிறப்புக்கள்
நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.
பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)
கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.