HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்_ஒப்பிலியப்பன் - திருநாகேஸ்வரம்_நாகேஸ்வரர் - ராகு - ராகு_பகவான் -
சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர் உடனுறை கிரிகுசாம்பிகை திருக்கோயில் திருநாகேஸ்வரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருநாகேஸ்வரம் கோயில் திருநாவுக்கரசர் - 3,திருஞானசம்பந்தர் - 2,சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.

கோயில் பற்றி: தல வரலாறு இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது. சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார். ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புக்கள் சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார். இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது. தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார். இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள். காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர். சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன. கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.