HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருநள்ளாறு சோமாஸ்கந்தமூர்த்தி

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார்.

இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான்.

ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான்.

அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

திருநள்ளாறு - திருநள்ளாறு - திருநள்ளாறு ஆலய முகவரி - திருநள்ளாறு ஆலயம் - திருநள்ளாறு கோயில் நேரம் - திருநள்ளாறு கோவில் அமைப்பு - திருநள்ளாறு சனீஸ்வரன் வரலாறு - திருநள்ளாறு சோமாஸ்கந்தமூர்த்தி - திருநள்ளாறு தல சிறப்பு - திருநள்ளாறு தீர்த்தங்கள் - திருநள்ளாறு தேவாரம் - திருநள்ளாறு நள தீர்த்தம் - திருநள்ளாறு நளன் தமயந்தி - திருநள்ளாறு பச்சைப் பதிகம் - திருநள்ளாறு வழி -