HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி

இறைவன்திருவிக்கிரமர்
இறைவிபூங்கோவல் நாச்சியார்
தல மரம்புன்னைமரம்
தீர்த்தம்பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
புராண பெயர்திருக்கோவலூர்
கிராமம்/நகரம்திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பங்குனி மாதம் - பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும்.இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி- திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம் மார்கழி - பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர் - 605757, விழுப்புரம் மாவட்டம் .


திருக்கோவிலூர் - திருக்கோவிலூர் அருகில் உள்ள ஆலயங்கள் - திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி - திருக்கோவிலூர் தேவாரம் - திருக்கோவிலூர் மக்கள் -