HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கானாட்டுமுள்ளூர்


பதஞ்சலி நாதர் உடனுறை கானார்குழலி திருக்கோயில் திருக்கானாட்டுமுள்ளூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கானாட்டுமுள்ளூர் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரம் - காட்டுமன்னார்குடி சாலை மார்க்கத்தில் கொள்ளிடம் நதியின் வடகரையில் திருக்கானாட்டுமுள்ளூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது.

கோயில் பற்றி: சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது. பதஞ்சலி வழிபட்டடு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் செங்கல்லாலான கோயில்; மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.