HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கண்ண மங்கை


இறைவன்பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
இறைவிகண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
தல மரம்மகிழ மரம்
தீர்த்தம்தர்ஷன புஷ்கரிணி
புராண பெயர்லட்சுமி வனம்
கிராமம்/நகரம்திருக்கண்ண மங்கை
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.
பிரார்த்தனை : இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை-610104 திருவாரூர் மாவட்டம்