HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கண்ணங்குடி


இறைவன்லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள்
இறைவிலோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி)
தல மரம்மகிழ மரம்
தீர்த்தம்சிரவண புஷ்கரிணி
கிராமம்/நகரம்திருக்கண்ணங்குடி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : கைகுண்ட ஏகாதசி
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல இறைவனை பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிட்டர், பிருகு, மாடரர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தரிசித்துள்ளனர். இங்குள்ள பெருமாள் உத்பல விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி இத்தல தீர்த்தத்தின் பெயரைக்கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள்

மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்றெரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி-611 104 நாகப்பட்டினம் மாவட்டம்