HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்கண்டியூர்


பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் உடனுறை மங்கள நாயகி திருக்கோயில் திருக்கண்டியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கண்டியூர் கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.

கோயில் பற்றி: இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர். மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள்.

தல வரலாறு

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9 கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3 கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.