HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருஆப்பாடி


பாலுகந்த ஈஸ்வரர் உடனுறை பெரியநாயகி திருக்கோயில் திருஆப்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருஆப்பாடி கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் சுமார் 2 Km தொலைவில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் கும்பகோணம்.

கோயில் பற்றி: தல வரலாறு மக்கள் வழக்கில் 'திருவாய்ப்பாடி' என்று வழங்குகிறது. இத்தலத்தில் சண்டேசுவரர் வழிபட்டு பேறு பெற்ற பெருமையுடையது. சிறப்புக்கள் மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கொடிமரமில்லை. முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது. கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஆப்பாடி உடையார் ' என்றுள்ளது. தற்போதைய நிலை (தேவை) கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது; இக்கோயிலுக்கு ஊர்மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமானதொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்கு காணக்கிடைக்குமோ? என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்களின் பாதுகாப்பிலேயே இக்கோயில் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டுவருகிறது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் மிகவும் பழுதடைந்துள்ளது. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எதுவுமில்லை.