திண்டுக்கல்
திண்டுக்கல்_கோட்டை_மாரியம்மன் -
| இறைவன் | அபயவரத ஆஞ்சநேயர் |
| தல மரம் | பலா |
| தீர்த்தம் | அனுமன் தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | திண்டுக்கல் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா : ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி.
சிறப்பு : இங்கு ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையும், இரவில் 9 மணி வரையும் திறந்திருக்கும்.
பொது தகவல் : இக்கோயிலுக்கு அருகில் அபிராமி, கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன.
பிரார்த்தனை : ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிறு மாற்றுகிறார்கள். துவங்கும் செயல்களில் தடையின்றி, வெற்றி கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை, வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு செய்வித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல்- திண்டுக்கல் மாவட்டம்