HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருவேற்காடு

திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1/2 கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல மரம்.

சென்னை - சென்னை உயிரியல் பூங்கா - சென்னை கபாலீஸ்வரர் கோவில் - சென்னை கலாச்சாரம் - சென்னை கல்வி - சென்னை நிர்வாகம் - சென்னை புவியியல் - சென்னை பொருளாதாரம் - சென்னை போக்குவரத்து - சென்னை மக்கள் - சென்னை வரலாறு - சென்னை விளையாட்டு - திருமயிலை வரலாறு - திருமுல்லைவாயில் - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் - திருவேற்காடு - திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி - திருவொற்றியூர் கோவில் வரலாறு - பாடி வல்லீஸ்வரர் ஆலயம் -