HolyIndia.Org
Holy India Org Add New Temple

சென்னை விளையாட்டு

மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே. எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

சென்னை - சென்னை உயிரியல் பூங்கா - சென்னை கபாலீஸ்வரர் கோவில் - சென்னை கலாச்சாரம் - சென்னை கல்வி - சென்னை நிர்வாகம் - சென்னை புவியியல் - சென்னை பொருளாதாரம் - சென்னை போக்குவரத்து - சென்னை மக்கள் - சென்னை வரலாறு - சென்னை விளையாட்டு - திருமயிலை வரலாறு - திருமுல்லைவாயில் - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் - திருவேற்காடு - திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி - திருவொற்றியூர் கோவில் வரலாறு - பாடி வல்லீஸ்வரர் ஆலயம் -