HolyIndia.Org
Holy India Org Add New Temple

சென்னை கல்வி

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் (Indian Institute of Technology-இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி), அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology-தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism-ஆசிய இதழியல் கல்லூரி), Madras School of Social Work (மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.

வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம். சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று.

சென்னை - சென்னை உயிரியல் பூங்கா - சென்னை கபாலீஸ்வரர் கோவில் - சென்னை கலாச்சாரம் - சென்னை கல்வி - சென்னை நிர்வாகம் - சென்னை புவியியல் - சென்னை பொருளாதாரம் - சென்னை போக்குவரத்து - சென்னை மக்கள் - சென்னை வரலாறு - சென்னை விளையாட்டு - திருமயிலை வரலாறு - திருமுல்லைவாயில் - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் - திருவேற்காடு - திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி - திருவொற்றியூர் கோவில் வரலாறு - பாடி வல்லீஸ்வரர் ஆலயம் -