HolyIndia.Org
செங்கானூர்
சத்யகிரீஸ்வரர் உடனுறை சகிதேவியம்மை திருக்கோயில் திருசேய்ஞலூர் (செங்கானூர்) என்ற இடத்தில் அமைந்துள்ளது .
திருசேய்ஞலூர் (செங்கானூர்) கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.
வழி: கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் சென்று செங்கானூர் நிறுத்தத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கோயில் பற்றி: திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்
தல வரலாறு
மக்கள் வழக்கில் 'சேங்கலூர் ' என்று வழங்குகிறது.
இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.
சிறப்புக்கள்
சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம்.
சத்தியகிரி, குமாரபுரி, சண்டேசுவரபுரம் என்ப வேறு பெயர்.
கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் 'கட்டுமலை' மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன.
சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.