HolyIndia.Org
Holy India Org Add New Temple

சீர்காழி கோயில்

சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வ்பரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இந்தச் சட்டநாதர், முத்துச் சட்டநாதர் என்ற பெயரோடு, வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவ உருவில் காட்சி தருகிறார்.

சீர்காழி - சீர்காழி ஆலய அமைப்பு - சீர்காழி இறைவன் - சீர்காழி கல்வெட்டுகள் - சீர்காழி கோயில் - சீர்காழி கோவிலில் வழிபட்டோர் - சீர்காழி சம்பந்தர் ஞானப்பால் உண்டது - சீர்காழி திரிவிக்கிரமன் - சீர்காழி தேவாரம் - சீர்காழி புராண வரலாறு - சீர்காழி வரலாறு - சீர்காழி விழாக்கள் - சீர்காழி விஸ்வநாதர் - தலப் பெயர்கள் -