HolyIndia.Org
Holy India Org Add New Temple

சீர்காழி

சீர்காழி_ஆலய_அமைப்பு - சீர்காழி_இறைவன் - சீர்காழி_கல்வெட்டுகள் - சீர்காழி_கோயில் - சீர்காழி_கோவிலில்_வழிபட்டோர் - சீர்காழி_சம்பந்தர்_ஞானப்பால்_உண்டது - சீர்காழி_திரிவிக்கிரமன் - சீர்காழி_தேவாரம் - சீர்காழி_புராண_வரலாறு - சீர்காழி_வரலாறு - சீர்காழி_விழாக்கள் - சீர்காழி_விஸ்வநாதர் - தலப்_பெயர்கள் -
சீ காளி வழி பட்டதனால் சீகாழி சீர்காழியாயிற்று. சீர்காழி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.

உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.