HolyIndia.Org
Holy India Org Add New Temple

சிதம்பரம்

சிதம்பர_ரகசியம் - சிதம்பரம்_அனந்தீஸ்வரர் - சிதம்பரம்_ஆத்மநாதசுவாமி - சிதம்பரம்_ஆலயம் - சிதம்பரம்_இளமையாக்கினார் - சிதம்பரம்_காயத்ரி_அம்மன் - சிதம்பரம்_கோயில்_சிறப்பு - சிதம்பரம்_கோவிந்தராஜப்பெருமாள் - சிதம்பரம்_தேவாரம் - சிதம்பரம்_நடராசர்_நாட்டியம் - சிதம்பரம்_வரலாறு - தில்லை_காளி -
சிதம்பரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலய நகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம்.

திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.