HolyIndia.Org
Holy India Org Add New Temple

சத்தியவேடு


இறைவன்வீரபத்திரர்
தல மரம்வில்வம், வேம்பு, அரசு
புராண பெயர்சத்திவீடு
கிராமம்/நகரம்சத்தியவேடு
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்தர பிரதேஷம்

திருவிழா : சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.
சிறப்பு : வீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த நந்தியை சந்தான நந்தீஸ்வரர் என்கின்றனர்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : வீரபத்திரர் சன்னதி முகப்பில் வரசித்தி விக்னேஸ்வரர், வேல்முருகன், பிரகாரத்தில் வர சித்தேஸ்வரர், மங்கள கவுரியம்பாள், தெட்சிணாமூர்த்தி, நாகர் மற்றும் நவக்கிரக சன்னதிகள்உள்ளன.இக்கோயிலில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் பார்வதியின் மடியில் சிவபெருமான் பள்ளிகொண்ட சுருட்டப்பள்ளி கோயில் இருக்கிறது.


பிரார்த்தனை : சுகப்பிரசவம் ஆவதற்கும், நல்ல வரன் அமைவதற்கும் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் : வீரபத்திரரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்வித்து, வெற்றிலை மாலை, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு - 517 588. சித்தூர் மாவட்டம். ஆந்திர மாநிலம்.