HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோவிலடி


இறைவன்அப்பக்குடத்தான்
இறைவிஇந்திரா தேவி, கமல வல்லி
தல மரம்புரஷ மரம்
தீர்த்தம்இந்திர புஷ்கரணி
புராண பெயர்திருப்பேர்
கிராமம்/நகரம்கோவிலடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பங்குனி உத்திரத்தில் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.
சிறப்பு : 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் "பஞ்சரங்கதலம்' என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம் : காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல இறைவன் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார். உபமன்யூ, பராசரர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாஸனம்

பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும் ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே

-நம்மாழ்வார்


முகவரி : அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி (திருப்பேர் நகர்) - 613105 தஞ்சாவூர் மாவட்டம்.