HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோவிந்தாபுத்துர்


விஜயநாதர் உடனுறை மங்கைநாயகி திருக்கோயில் திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: கும்பகோணம் - திருவைகாவூர் சாலை வழித்தடத்தில் கோவிந்தாபுத்துர் என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.

கோயில் பற்றி: தல வரலாறு அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், 'விசயமங்கை' எனப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது. தற்போதைய நிலை (தேவை) மிகவும் பழமையான கோயில், பழுதடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார் இலர். சுவாமி, அம்பாள் விமானங்களில் கலங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பூசைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின் சொந்த முயற்சியால் நடைபெறுகிறது.