HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோடியக்காடு


இறைவன்அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
இறைவிஅஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல மரம்குராமரம்
தீர்த்தம்அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு (கோயிலுள் உள்ளது)
புராண பெயர்திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
கிராமம்/நகரம்கோடியக்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு : மிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார்.

இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார்.

இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார்.

அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.


திருவிழா : இவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.
சிறப்பு : நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர்
திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, லிங்கோத்பவர் உள்ளனர். பிரகாரத்தில் கணபதி லிங்கம் இருக்கிறது.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : அமிர்த சுப்பிரமணியர் : திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர்.

அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார்.

இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது.   

மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.

இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி  அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும்.

கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்' என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள்.


பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர்

கடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல் குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே.

-திருஞான சம்பந்தர்


முகவரி : அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு-614 821. நாகப்பட்டினம் மாவட்டம்.