HolyIndia.Org
Holy India Org Add New Temple

கூழையகவுண்டன்புதூர்


இறைவன்மொக்கணீஸ்வரர்
இறைவிமீனாட்சி
தல மரம்வில்வம்
புராண பெயர்மொக்கணீச்சரம்
கிராமம்/நகரம்கூழையகவுண்டன்புதூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

வரலாறு :  முற்காலத்தில் இரண்டு வணிகர்கள் இத்தலம் வழியாக வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினமும் சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் இங்கு ஒருநாள் இரவில் தங்கினர்.

மறுநாள் காலையில் சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அவ்விடத்தில் லிங்கம் எதுவும் இல்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைத்

திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம் போல் தோற்றம் உருவாக்கி, மாலையிட்டு ஓரிடத்தில் வைத்தார். ""நண்பா! இதோ சிவலிங்கம், இதை பூஜித்துக் கொள்,'' என்றார்.

அப்பாவி பக்தரும், அதை நம்பி கோணிப்பை லிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும், ""ஏமாந்தாயா! இது லிங்கம் இல்லை, கோணிப்பை,'' என்ற நண்பர், அதை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அதை அசைக்கக்கூட முடியவில்லை. அது நிஜ லிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தினார். அவரும் சிவபக்தரானார்


திருவிழா : திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி.
சிறப்பு : சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை காலை 10- 12 மணி வரை திறந்திருக்கும், மற்ற நேரங்களில் திறக்க வேண்டுமானால், முன் கூட்டியே அர்ச்சகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.
பொது தகவல் :

அளவில் மிகச்சிறிய கோயில் இது. அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். இவருக்கான குருபூஜை சிறப்பாக நடக்கிறது. அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார்.

கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபம் இருக்கிறது. இதில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில், கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது.  தலவிநாயகர்: மூத்தவிநாயகர்


பிரார்த்தனை : பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இங்கு வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள்.


நேர்த்திக்கடன் : அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகங்கள் செய்கின்றனர்.
தல சிறப்பு : சிறப்பம்சம்: கொள்ளு வைக்கும் பைக்கு "மொக்கணி' என்று பெயர் உண்டு. எனவே சிவன், "மொக்கணீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இந்தக் கோயில் முழுமையாக அழிந்து போயிருந்தது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "கீர்த்தி திருத்தாண்டகத்தில்' இத்தலம் பற்றி, ""மொக்கணி அருளிய முழுத்தழல்மேனி சொக்கதாகக் காட்டிய தொன்மையும்'' என குறிப்பிட்டு பாடியுள்ளார். இப்பாடலை அடிப்படையாக வைத்து மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

அளவில் சிறிய கோயில். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள்.

முன் மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில், மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில், கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர், "மூத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.


பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழையகவுண்டன்புதூர் - 641 654. கோயம்புத்தூர் மாவட்டம்