HolyIndia.Org
Holy India Org Add New Temple

குற்றாலம்

குற்றாலநாதர் - குற்றாலம்_தேவாரம் - குற்றாலம்_மக்கள் -
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் இருந்து 5 Km தொலைவில் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் தென்காசி.

குற்றாலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலநாதர் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.