HolyIndia.Org
Holy India Org Add New Temple

கும்பகோணம் சாரங்கபாணி

இறைவன்சாரங்கபாணி, ஆராவமுதன்
இறைவிகோமளவல்லி
தீர்த்தம்ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
புராண பெயர்திருக்குடந்தை
கிராமம்/நகரம்கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் 165 அடி உயரமும் கொண்டவை. இதற்கடுத்த மூன்றாவது உயரமானது கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரமே ஆகும். 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை : கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்து நடக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் - 612 001 தஞ்சாவூர் மாவட்டம்


கும்பகோணம் - கும்பகோணம் அகோர வீரபத்திரர் - கும்பகோணம் அருகில் உள்ள ஆலயங்கள் - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் - கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் - கும்பகோணம் சாரங்கபாணி - கும்பகோணம் சிறப்புக்கள் - கும்பகோணம் சோமேஸ்வரர் - கும்பகோணம் தேவாரம் - கும்பகோணம் நாகேஸ்வரர் - கும்பகோணம் பிரம்மன் - கும்பகோணம் மகாமகக் குளம் - கும்பகோணம் ராமசாமி - கும்பகோணம் வரலாறு - நாகேஸ்வரன் கோவில் -