HolyIndia.Org
Holy India Org Add New Temple

கும்பகோணம்

கும்பகோணம்_அகோர_வீரபத்திரர் - கும்பகோணம்_அருகில்_உள்ள_ஆலயங்கள் - கும்பகோணம்_ஆதிகும்பேஸ்வரர்_கோவில் - கும்பகோணம்_ஆதிவராகப்_பெருமாள் - கும்பகோணம்_காசி_விஸ்வநாதர் - கும்பகோணம்_சாரங்கபாணி - கும்பகோணம்_சிறப்புக்கள் - கும்பகோணம்_சோமேஸ்வரர் - கும்பகோணம்_தேவாரம் - கும்பகோணம்_நாகேஸ்வரர் - கும்பகோணம்_பிரம்மன் - கும்பகோணம்_மகாமகக்_குளம் - கும்பகோணம்_ராமசாமி - கும்பகோணம்_வரலாறு - நாகேஸ்வரன்_கோவில் -
கும்பகோணம் தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். காவிரிக் கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 313 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் பல கோயில்கள் உள்ளன. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது.

கீழைத் தமிழத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே மூன்று பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன.