HolyIndia.Org
Holy India Org Add New Temple

குடவாசல் தல வரளாறு

சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு. குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக் கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புது பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்த தும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

குடவாசல் - குடவாசல் தல வரளாறு - குடவாசல் தேவாரம் - குடவாசல் மக்கள் -