HolyIndia.Org
Holy India Org Add New Temple

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்

இறைவன்வரதராஜர் (தேவராஜர்)
இறைவிபெருந்தேவி
தல மரம்அரசமரம்
தீர்த்தம்அனந்த சரஸ்
புராண பெயர்அத்திகிரி, திருக்கச்சி
கிராமம்/நகரம்காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பிரம்மோற்ஸவம்- வைகாசி - 10 நாட்கள் திருவிழா - பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
சிறப்பு : பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் 

இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.


பிரார்த்தனை : இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர் 

தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார், பூத்தாழ்வார்

அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின் தித்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் மூத்திமறையாவான் மாகடல் நஞ்சுண்டான்தனக்கும் இறையாவான் எங்கள் பிரான்.-பூதத்தாழ்வார்

 

 


முகவரி : அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்


காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் - காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் - காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி - காஞ்சிபுரம் ஆலயம் - காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் - காஞ்சிபுரம் குமரக்கோட்ட முருகன் - காஞ்சிபுரம் சகோதர தலம் - காஞ்சிபுரம் சத்யநாதர் - காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி நாயனார் - காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் தேவாரம் - காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் - காஞ்சிபுரம் முக்தீஸ்வரர் - காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் - காஞ்சிபுரம் வரலாறு - நிலாத்துண்டப்பெருமாள் தல சிறப்பு - நிலாத்துண்டப்பெருமாள் வரலாறு -