HolyIndia.Org
Holy India Org Add New Temple

காஞ்சிபுரம் சகோதர தலம்

சிவனின் கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவத்திற்கு தன் தங்கை பார்வதிதேவி விமோசனம் பெற்ற இத்தலத்தில் அவளது அண்ணன் மகாவிஷ்ணுவும் நோய் நீங்கப்பெற்றுள்ளார். பார்வதிக்கு கங்கையையும், மகாவிஷ்ணுவிற்கு சந்திரனையும் பயன்படுத்தி சிவன் அருள் செய்த தலம். சகோதர சகோதரிகள் நிலாத்துண்ட பெருமாளையும், ஏகாம்பரேஸ்வரரையும் வணங்கினால் அவர்களிடையே ஒற்றுமை கூடும் என நம்புகிறார்கள். கோயிலின் முதல் பிரகாரத்தில் சிறிய சன்னதியில் புருஷசூக்த விமானத்தின் கீழ், பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கென தனியே பிரகார தெய்வங்கள் இல்லை.நோய் நீங்குவதற்காக தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது. ஆனாலும், மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியையே "நேர் உருவில்லாத் தாயாராக' எண்ணி வழிபடுகின்றனர். உருவமில்லாமல் பெருமாளுடன் ஐக்கியமாகி இருப்பதால் இப்பெயர் வந்தது. சிவனை வணங்கி குணமாகியவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது. இவரை குளிர்ச்சிப்படுத்துவதற்காக சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கின்றனர். பிறைச்சந்திரனின் ஒளிபட்டவர் என்பதால் இத்தலத்து பெருமாளை திருமங்கையாழ்வார், சந்திரனின் பெயரையும் சேர்த்து ""நிலாத்திங்கள் துண்டத்தாய்'' என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். "சந்திர சூடப் பெருமாள்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் - காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் - காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி - காஞ்சிபுரம் ஆலயம் - காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் - காஞ்சிபுரம் குமரக்கோட்ட முருகன் - காஞ்சிபுரம் சகோதர தலம் - காஞ்சிபுரம் சத்யநாதர் - காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி நாயனார் - காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் தேவாரம் - காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் - காஞ்சிபுரம் முக்தீஸ்வரர் - காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் - காஞ்சிபுரம் வரலாறு - நிலாத்துண்டப்பெருமாள் தல சிறப்பு - நிலாத்துண்டப்பெருமாள் வரலாறு -