HolyIndia.Org
Holy India Org Add New Temple

காசி விசாலாட்சி மணிகர்ணிகை

காசியில் அன்னையின் திருச்செவிகளிலிருந்து அற்றுப் போன குண்டலம் வீழந்தது.அப்படி விழுந்த தலம் மணிகர்ணிகை பீடத் தலமானது. கர்ணம் என்றால் காது. அன்னை அணிந்திருந்த விலைமதிப்பற்ற மணிகள் பதித்த காதணி வீழ்ந்ததால் பீடத்தின் பெயர் ""மணிகர்ணிகை"" ஆயிற்று. காசியின் விளிம்பில் ஓடும் கங்கைக் கரையில் மற்ற தீர்த்தங்களை விடவும் மணிகர்ணிகைப் படித்துறையை நிமிர்ந்து பார்த்தால் மெய் சிலிர்க்கும்.

மரணத்தை இங்கு போல் வேறெங்கும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதில்லை.அன்னை இட்ட அமுதப் பிச்சை தான் இந்த உயிர்.அதை உள்ளிறுத்திச் சுமக்கும் வாகனம்தான் இந்த உடல்,மரணம் என்பது வாழ்க்கையின் முரட்டுத் தனமாக முற்றுப்புள்ளி இல்லை.அது பிறவியின் முடிவில் மலரும் ஒரு மேன்மையான மாற்றம். இந்தக் தெளிவு மணிகர்ணிகையில் எரியூட்டுபவர்கள் முகங்களில் கூடத் தென்படுவது மகத்தான சிறப்பு.

அனனையின் திருச்செவியில் அணிந்திருந்த காதணிகள் இந்தத் தீர்த்தத்தில் வீழ்ந்தபோது நடந்ததொரு சம்பவம்... உயர் குலத்தைச் சேர்ந்த சிலர்,ஈசன் கோயிலில் பணிவிடைகள் செய்து புகழ் கொண்டிருந்த நேரம் அது. விண்ணிலிருந்து வீழ்ந்த சிவப்புக்கல் பதித்த காதணி அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது. விலைமதிப்பற்ற ஆபரணத்தைக் கண்டதும்.குலப்பெருமையை மறந்தனர்."மன்னருக்கு மன்னராக இருப்பவர்களிடம் கூட மதிப்புமிக்க இதைப்போன்ற ஆபரணம் இருக்காது. இந்த் ஒரு காதணியை விற்றால், ஒன்பது தலைமுறைகள் உட்கார்ந்து உண்ணலாமே" எனப் புத்தி பேதலித்தது.அந்தக் காதணியை அவர்கள் அவசர அவசரமாக ஒளித்து வைத்தனர்.

சர்வேஸ்வரனிடமிருந்து ஒளிக்க் முடியுமா? வாழ்பவர்களுக்கு எல்லாம் வழிகாட்டிகளாக விளங்க வேண்டிவ்ர்களுக்கு இப்படி ஒரு கள்ள்த்தனமா? ஆண்டவ்னுக்குச் சேவை செய்பவர்கள் இப்படி அற்பத்தனமாக நடக்கலாமா? ஈசன் சினந்தான். ""ஆலயத்தில் பணிபுரிய இனி இவர்களுக்கு அருகதை இல்லை"" என வெகுண்டு மொழிந்தான். அன்னையின் காதணி என்று தெரியாமல் அற்பச்செயலில் ஈடுபட்டவர்கள் அரண்டு போனார்கள்."இழி செய்ல் செய்ததற்கு ஏற்ற தண்டனை தா!" ஆனால்,எங்களை உன்னிடமிருந்து விலக்கி விடாதே" என்று இறைவன் தாள்களில் விழுந்து கெஞ்சினர்.

அன்னைக்கு இரக்கம் அதிகம்.காசியில் இருந்தவர்கள் சிவனுக்கு இத்தனை நாள் சேவை செய்தவர்கள். தங்கள் தவற்றை உணர்ந்து தலை தாழ்ந்து நிற்பவர்கள்.மலைமகள் அவர்களை மன்னிக்கத் துணிந்தாள்.

""உங்களுக்குத் தண்டனை தரப்போவதில்லை. ஆனால் படிப்பினை தரப் போகிறேன்.மாயப் பொருள்களுக்கு மதிப்பு தந்து மயங்குவது முட்டாள்தனம். இதை இவ்வுலகம் இருக்கும் வரை எடுத்துச் சொல்லும் பணியில் உங்களை அமர்த்தப்போகிறேன்.இன்றிலிருந்து உங்கள் குலம் மணிகர்ணிகையில் மாய்ந்த உடல்களுக்கு எரியூட்டும் பணி செய்து ஈசனுக்கு நெருக்கமாக இருக்கலாம்...."" அன்று அன்னையின் மணிகர்ணிகையை மறைத்து வைத்தவர்கள் தான் இன்று மாண்டு போனவர்களின் சிதைகளை எரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சகதி பீடத்தில் விசாலாட்சி வரம் அருளும் அன்னை, புண்ணியத் தலமான காசியில் இன்னும் பல கோயில்கள் கொண்டுள்ளாள். கங்கைக் கரையிலிருந்து ச்ற்று ஒதுங்கி தனக்கென ஒரு திருக்குளம் அமைத்துக் கொண்டு அன்னை ஆட்சி செய்யும் ஆலயம் துர்க்கா மந்திர் எனப்படும் துர்க்கை கோயில். புனித கங்கையை ஒட்டிய கரையில் காசி விஸ்வநாதருக்கு நெருக்கமானதொருஆலயத்தில், அன்னை சக்தி மாபெரும் மாட்சிமை கொண்டு வீற்றிருக்கிறாள். குழந்தையின் பசியறிந்து கூப்பிட்டு ஊட்டுபவள் அன்னையைத் தவிர வேற யாராக இருக்க முடியும்? மாங்கொட்டைக்குள் இருக்கும் வண்டுக்கும், பாறைக்குள் இருக்கும் தேரைக்கும் கூட அத்தனை உலகங்களையும் தன் கருப்பையில் சுமந்திருக்கும் பராசக்தி தானே பரிந்தூட்டுகிறாள்...?

அகில நாயகனுக்கே அன்னை அன்னமிட்ட தலம் காசி. வியாசர் அருளிய ஸ்கந்த புராணம் விசாலாட்சி மகிமை பற்றி விரிவாகப் பேசுகிறது. மணிகர்ணிகை தீர்த்தத்தில் நனைந்து,மங்கள நாயகி விசாலாட்சியை தொழுதால் சக்ல செள்பாக்கியங்களும் கிட்டும்.அன்னியின் மகாபீடத்தில் அன்புடன் தானங்கள் செய்தால்... கன்னிகளுக்கு குணம் நிறைந்த கணவர்கள் கிடைப்பார்கள். தள்ளிப் போன் திருமணங்கள் நடக்கும்..திருமணமானவர்களுக்கு புத்திர பேறு கிட்டும் "அன்னையை உண்மையாக வணங்கித் தொழுதால் முடிந்தபின் முக்தி கிடைக்கும்; என்கிறார் முற்றும் அறிந்த முனிவர் வியாசர்

காசி - கட்டீசர் கிராமம் - காசி அகோரி - காசி அண்ணபூரனி - காசி அமைவிடம் - காசி ஆலயங்கள் - காசி எப்படி செல்வது - காசி கோயில் முகவரி - காசி தலபெருமை - காசி தீர்த்தம் - காசி படங்கள் - காசி மகான்கள் - காசி மும்மதம் - காசி வரலாறு - காசி விசாலாட்சி அம்மன் - காசி விசாலாட்சி மணிகர்ணிகை - காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாத் கோயில் நேரஅட்டவணை - காசியின் நிஜ முகம் - காசியில் தங்கும் வசதி - தால் மண்டி -