HolyIndia.Org
Holy India Org Add New Temple

கபிஸ்தலம்


இறைவன்கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
இறைவிரமாமணி வல்லி, பொற்றாமரையாள்
தல மரம்மகிழம்பூ
தீர்த்தம்கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
புராண பெயர்திருக்கவித்தலம்
கிராமம்/நகரம்கபிஸ்தலம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
பிரார்த்தனை : ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.
நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தல சிறப்பு : இத்தலபெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்- 614203 தஞ்சாவூர் மாவட்டம்.